மாய வாழ்வு

பொன்னென்பார் பொருளென்பார் கோடியென்பார்
மனதில் அன்பொன்றே இல்லையடா!
பொன்னில்லை பொருளில்லை கோடியுமில்லை
மனதில் அன்பொன்றே இருக்குதடா!!
வீரனென்பார் கலையென்பார் கதைசொல்வார்
செயலில் விவேகம் இல்லையடா!
முட்டாலில்லை ஆணவமில்லை கட்டுக்கதையில்லை
செயலில் விவேகம் இருக்குதடா!!
பொய்யென்பார் பொறாமையென்பார் போட்டியென்பார்
ஒற்றுமை என்றும் இல்லையட!
பொய்யில்லை பொறாமையில்லை போட்டியில்லை
ஒற்றுமை ஒன்றே இருக்குதடா!!
போறாட்டமென்பார் சூதாட்டமென்பார் வெறியாட்டமென்பார்
உலகில் அமைதி இல்லையடா!
போறாட்டமில்லை சூதாட்டமில்லை வெறியாட்டமில்லை
உலகில் அமைதியொன்றே இருக்குதடா!!
தீவழியென்பார் தீயசெயல்செய்வார் தியதுணைசெல்வார்
இருதியில் அவனடைவது நரகமடா!
நல்வழியென்பார் நற்செயல்செய்வார் நற்துணைசெல்வார்
இருதியில் அவனடைவது சொர்கமடா!!
-வ.காமேஷ்.

எழுதியவர் : kamesh (21-Apr-16, 9:10 am)
பார்வை : 144

மேலே