எனக்குப் பிடிக்காது
இலட்சக்கணக்கான முட்டாள்கள்
என் பின்னே எனைத் தாங்கி நிற்க முன்வந்தால்
அடிமைகளாகவே அவர்களைக் காண்பேன்
பார்த்துப் பார்த்து ரசித்திடுவேன்;
ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிடுவேன்.
கைதட்டி விசிலடிக்கும் கூட்டம்
கைகட்டி என் பின்னே நிற்கும் போது
கண்ணகியையும் எனக்குப் பிடிக்காது
திருவள்ளுவரையும் எனக்குப் பிடிக்காது
செம்மொழியையும் எனக்குப் பிடிக்காது
அறிஞர் அண்ணாவையும் எனக்குப் பிடிக்காது
எனக்குப் பிடித்ததெல்லாம் நானே தான்
எனக்காக நானே
என் அடிமைகளுக்காகவே நானென்று சொன்னாலும்
எனக்காகவே நான் என்பதுவே உண்மை.
ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும்
அவர்களால் எனையளக்க முடியாது.