வறுமையை எதிர்த்துப் போர் புரிவோ ம்
விதி வந்து நமக்கு எதிராய்
சதி செய்ய அனுமதியோம்
சூனியங்களை எல்லாம்
உண்மைகளால் நிரப்பி விட்டு
குற்ற உணர்வுகளை
அற்றுப் போகச் செய்யோம்
மனிதத்தைக் காப்பதே
மனிதரின் கடமை என
இனியாவது உணர்வோம்
வறுமையை எதிர்த்துப்
போர் புரிவோம்