முதற் காதலே
நீயோ பளிங்கு வீடு
நானோ பட்டிக்காடு
கட்டிக்கொண்டு நித்தம் வாழ
எப்படி நினைப்பாய்...
தரம் பார்க்கும் உன் வீட்டில்
இத் தகரம் எங்கே சேருவது...
என் முதற் காதலே!
முத்துமணி ரத்தினமே
தரம் தேடும் அவர்களுக்கு
தரமாகி நான் வருவேன்
காத்திருடி கள்ளி...
***