படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி

படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
ஆடிய ஆட்டம் அடங்கியது
எழ நினைத்தாலும் இயலாது
புழுக்கள் ருசி பார்க்கும்
தடுக்க முடியாது !
--------------------------------
யாராக இருந்தாலும்
ஆறடியே அளவு
எரித்தால் அதுவுமில்லை !
---------------------------
மிக நீண்ட தூக்கம்
மீள வழியில்லை
அசைவற்ற அடக்கம் !
--------------------------
அடங்காதவர்களையும்
அடக்குமிடம்
அமைதியிடம் !
---------------------------
டெல்லிக்கு இராசானாலும்
சமாதிக்குப் பிணம்தான்
மண்ணிற்கு இரைதான்
---------------------------------
மீண்டு எழுவது சாத்தியமில்லை
முடிந்தால் முடிந்ததுதான்
இருக்கையில் பயன்பட வாழ் !
-----------------------
நண்பர்கள் அழுதாலும்
உறவுகள் கதறினாலும்
மாண்டவர் திரும்புவதில்லை
---------------------------
புத்தனுக்கு ஞானம் போதி மரத்தடியில்
பித்தனுக்கு ஞானம் சமாதிக்கடியில்
நல்லவனுக்கு ஞானம் வாழ்கையில் !
-------------------------------------------
தேக்கு மரத்தில் சவப்பெட்டி செய்தாலும்
தேகத்தை புழுக்கள் உண்பதை
தடுக்கவே முடியாது !
-----------------------
நிரந்தரமற்ற வாழ்க்கையில்
நிரந்தரமானது அன்பு மட்டுமே
நாளும் அன்பு செய் !
இறந்த பின்னும் வாழலாம் !
---------------------
.