காதலும் கவிதையும்

காதலும் கவிதையும்
பிரித்தாலும் பொருள்தரும்
இரட்டை கிளவி;
சேர்ந்தால்,
தமிழ் தரும் கவியறுவி!!!

பார்த்தவுடன் காதல்,
காதல் பூத்தவுடன்
உதித்தது - முதல் கவிதை

அவளிடம் சொல்ல
முயன்ற காதலை,
எழத்துக்களால் அவளுக்கு
உணர்த்தியது - காதல் கவிதை

காதலை ஏற்றதும்
ஆனந்த கவிதை

அவள் அழகை வர்ணிக்க
சுந்தர கவிதை

சின்னஞ்சிறு சண்டையில்
ஊடல் கவிதை

பிண் மன்னிப்புகளுடன் தொடரும்
கூடல் கவிதை

கை கோர்த்தால் கவிதை

முதல் முத்தம் கவிதை

தோள் சாய்ந்தால் கவிதை

காதல் வேண்டாம் என்றதும்
கேவக்கவிதை

என்னை மறந்திடு என்றதும்
மரண கவிதை

அவள் திருமணத்தன்று
போதை கவிதை

இறுதில் ,
கல்லறையில் எழதப்படும்
கடைசி கவிதை!!!

காதல் திருமணங்களை விட,
காதல் தோல்வியால் உருவாகிய
கவிஞர்களே அதிகம்!!!

எனக்கு இன்னும்
கல்யாணமாகல;
கவிஞனானு எனக்கு
தெரியல!!! ;)

எழுதியவர் : பிரபாகரன் (24-Apr-16, 12:10 pm)
பார்வை : 255

மேலே