தேகமில்லா உயிர்

என் ஜீவன் பாடுது
உன் விழியோர ஊஞ்சலிலே
உடலில்லா ஜீவன் ஒன்று
உன் நெஞ்சோரம் வந்து நின்று
பாடுது காதல் கேட்டு
உன் மனமில்லா நெஞ்சில்வந்து கதறுதே கண்ணீர்விட்டு
காதலில் தோற்றபின்னும் வானேறி போனபின்னும்
காற்றாகி தானும் வந்து கதறுதே உன் நெஞ்சம் வந்து
தேடாத என் நெஞ்சமெல்லாம்
கூடாத உன் தேகம்தன்னில்
கூடிடவும் துடிக்குதென்னில்
காற்றாகி போனபோதும்
தென்றலாகி தீண்டுகையில்
குளிர் வந்து தாக்குதென்னில்
தேகமின்றி ஆனபோதும்
தென்றலாகி தேடிவந்து
சேர்த்தணைப்பேன்
உன்னை நெஞ்சில்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (24-Apr-16, 12:17 pm)
பார்வை : 96

மேலே