உன் நினைவுகள் என்னில் அசைபோடுதடி 555

என்னுயிரே...

உன்னை இதற்க்கு முன்பு நான்
பார்த்ததே இல்லை...

அன்றுதான் முதன்முதலில்
பார்த்தேன் நம் பள்ளியில்...

அரும்பு மீசை
முளைக்கும்போதே...

ஆசை வந்ததடி எனக்கு
உன்மீது நீ என்னவள் என்று...

காலை நேரம் பள்ளியில்
உறுதிமொழி எடுக்கும் நேரமெல்லாம்...

உதடுகள் சொன்னாலும் மனதில்
நினைப்பது வேறுதாண்டி...

எல்லோரும் நம் உடன்பிறப்பு
என்று சொல்லும் நேரமெல்லாம்...

உன்னை தவிர எல்லோரும்
உடன் பிறப்பு என்று சொல்வேனடி...

இன்று நான் நினைத்து
பார்க்கையில்...

என் முதல் காதல்
பள்ளியில்தாண்டி உன்மீது...

இன்று நீ உன் குடும்பத்தோடு
இருப்பாய் என்று நினைக்கிறேனடி...

என்னவளே நீயும் நினைத்து
பார்ப்பாயா எப்போதாவது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Apr-16, 9:07 pm)
பார்வை : 419

சிறந்த கவிதைகள்

மேலே