உள்ளத்தை வென்றவள்

இரவுதோறும் நிலவைப் பார்த்தே
கனவுதோறும் அவளை நினைத்தே
பாடல், ஒன்று, நான்பாட - வந்தேன்
சந்தம் சிந்தும் தமிழாழே !

அவள் பதமான பாதங்கள்
இதமாக ஓடும்
என் இளநெஞ்சம் அவள்
அன்புக்கு ஏங்கும்

அவள் குழலோடு சூடும்
நறுமலராக நானும்
என்றும் இருந்தாலே போதும்
வேறென்ன வேண்டும்

அவள் கொடியான இடையோரம்
சூழும் பட்டாகமாற
ஒரு வரமொன்று கிடைத்தால்
அதுவே பேரின்பம்

ஈருடலோடு ஓர் உயிராய்
நாம்வாழும் வாழ்வை
இங்கு உள்ளோர்கள் கண்டுள்ளம்
நெகிழ்ந்தாட வேண்டும்

அவள் அழகின் பேரொளியால்
என் இரவுக்கும்கூட
நல் ஒளியொன்றைத் தந்தாள்
என்னுள்ளத்தை வென்றாள் !

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (29-Apr-16, 10:49 am)
பார்வை : 73

மேலே