சேர நாட்டு வளம்

மங்கலப் பெண்டிர் நெற்றியிலே
பொங்கும் மங்கலத் திலகமே
மங்கையர் தீட்டிடும் மாக்கோலத்திலே
ஊரிடும் எறும்புக்கு உணவாகுமே
மகளிர்க் கொடி இடையிலே
கொஞ்சிடும் அன்புக் குழவியே
வெய்யோன் எரிக்கும் வேளையிலும்
ஏறும் சளைக்காது ஏரிடுமே
உழைத்தால் உணவு கழனியிலே
ஏரிட்டுப் படைக்கும் உழவனே
துணைவன் பசியாறத் தலையிலே
துணையேந்திடு வாள்கஞ்சிக் களையமே
கறியிட்டுச் சமைத்த காரசாரத்திலே
சிறப்புர நடந்திடும் விருந்தோம்பலுமே
வில்லொடு தொடுத்திட்ட அம்பிலே
கொடி வான்முட்டப் பறக்குமே
செந்தமிழ் சேர நாட்டினிலே
பொங்கும் இன்ப வளமே !

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (29-Apr-16, 11:22 am)
பார்வை : 928

மேலே