காட்சிப் பதிவு

நிலத்தகடுகளின் மோதல்
நித்தமதன்மேல் காதல்
இயற்கை கொண்டதுவோ
நானும் கொண்டதுவே!
மூடுபனி அழகும்
மூங்கில் அதனோடும்
பிளிரு வேளமஞ்ச
பதுங்கிப்பாயும் வேங்கை
கானமயிலோடு குயிலாட
வரையாடும் வரவஞ்சும்
முகில்மறைக் குன்றிலேறிய
என் மனதின் பதிவுகளை
என்ன சொல்லிப் பாடுவேணம்மா !

- செ.கிரி பாரதி

எழுதியவர் : செ.கிரி பாரதி (29-Apr-16, 11:07 am)
பார்வை : 127

மேலே