வலியோடு வெற்றி

சிரிப்பலையால்
முகம் மலர
சிகரத்தனிலே ஏறிட வேண்டும்.

உன் கொடி
உயரமாக பறக்க
ஆசைக் கொண்டாயெனில்
நீ
ஒரு
உண்டியலை தேர்ந்தெடுத்துக்கொள்.

அதில்
அலட்சியங்களையும்
அவமானங்களையும்
சேகரித்து வை.
அலட்சிய கண்களும்
அவமானச் சொற்களும்
ஆயுதமெனில்
நீ
நிராயுதபாணியாக
நிற்பதாகவே அர்த்தம்.

எட்டாத இலக்கினை
எட்டிப்பிடிக்க உதவும்
வெறிக்கு
எரியூட்டுபவையல்லவா அவைகள்!

கனாக்களென்னும் விளக்கிற்கு
வினாக்களென்னும்
ஒளி தரும்
எண்ணெய்யும் திரியும்மல்லவா
அவைகள்!

மெல்ல மெல்ல மெரூகூட்டி,
உன்னைப் பக்குவமாய்
உருவாக்கிக் கொள்.

கனவுக்குள் கண் அயர்வதும்
எதார்த்தத்தில் பின் தொடர்வதும்
ஏணியின் இரு பக்கமெனில்
முயற்சியெனும்
குறுக்குப்படி கட்டிக்கொள்
மேலேற....

தவறிய மீன்
தடம் தேடும்.
தப்பிய மீன்
தடம் போடும்.

எந்த மீன் நீ?

கடல் காண்பதா?!
வலை காண்பதா?!

முடிவு தான்
முதல் முயற்சி,
முன்னேற்றத்திற்கு.

முட்டையிட்டப் பின்னே
அடைக்காக்கும் கோழி.

உன் கொடி
உயரெழும்ப
நாணலாய் இரு!
நந்தியாய் இரு!
நந்தவனமாய் இரு!

உருப்பிடுவதற்கு
உதைபடும் கல்லால் தான்
முடியும்.
உதைத்த கழுதையைவிட
உதை வாங்கியவனுக்கே
அறிவு தேவை.

அறிவிலியாக உதை!
அறிவாளியாக உதைபடு!

உன் செடி வளர,
இறுக்கிப்படிப்பதற்கு மண்
இறுக்கம் உறுதியாக நீர்
ஊட்டம் பெற உரம்
தேவை தானே?!

மண், நீர், உரம்
செடிக்கு.

நம்பிக்கை, துணிவு, அறிவு
உனக்கு.

உன் சிகரத்தில்
உன் கொடி பறக்க
உன் பாதையில்
நீ
பயணித்திருந்தால்
பெற்றிருக்கும்
வெற்றி
வலியோடு வெற்றி தான்.......

எழுதியவர் : சிவலிங்கம் (29-Apr-16, 3:21 pm)
Tanglish : valiyodu vettri
பார்வை : 71

மேலே