வலியோடு வெற்றி

வெற்றி.....

என் தாயின் கனவுகளுக்கு.....

இக்கட்டிலும் என்னை ஈன்றெடுத்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த
என் தாயின் அன்புள்ளத்திற்கு.....

ஏழ்மையின் பிடியில் அகப்பட்டிருந்தும்
எஐமானனாய் என்னை ஆக்கிய
என் தாயின் தன்னம்பிக்கைக்கு.....

தூண்டுகோலாய் என் ஒவ்வொரு
முயற்சிக்கும் ஊக்குவித்த
என் தாயின் ஊக்குவிப்புக்கு.....

என்னை முன்னேற்ற பாதையில்
வழிநடத்திச் சென்ற
என் தாயின் வழிகாட்டுதலுக்கு.....

சமூகத்தில் என்னை ஓர் உயர்ந்த
இடத்தில் உயர் பதவியில்
அமரச் செய்த
என் தாயின் நம்பிக்கைக்கு.....

வலியும் வேதனையும்
வறுமையோடு அனுபவித்தாள்.....

என்னை வறுமையின் சுவட்டை
தகர்தெரிக்க ஆளாக்கினாள்......

உழைப்பின் அருமையை
அறியச் செய்தாள்.....

வெற்றியின் ரகசியம்
உணரச் செய்தாள்.....

என் தாயின் வலிகளுக்கு
கிடைத்த வெற்றிப் பரிசாய்....

நான்..... இன்று....
அவள் கனவுகளை நனவாக்கி
அவள் பாதத்தில் பணியச் செய்கின்றேன்.......
வலியோடு வெற்றி கண்ட
பூரிப்புடன் தலை நிமிர்ந்து
நிற்கின்றாள்.....
வலியின் சுவடு முகத்தில் தெரிந்தாலும்
உதட்டில் வெற்றிப் புன்னகையுடன்
என் தாய்......

எழுதியவர் : நித்யஸ்ரீ (29-Apr-16, 5:46 pm)
Tanglish : valiyodu vettri
பார்வை : 95

மேலே