உழவன்

உழவரின் உயிர் மூச்சே.....

அவர்கள் படும்
துயர் கண்டு மனம் இரங்கி
மழைத் துளியாய்
மண்ணை அடைய மாட்டாயா....?

அவர்களின் அவல நிலை
உன்னை பாதிக்கவில்லையா.....?

உழவும் உழைப்பும்
உயிர் மூச்சாய் எண்ணி
களனியிலே வேர்வை சிந்தும்
அவர்களின் துயர்
உன் கண்களில் படவில்லையா....?

மற்றவர்கள் பசி ஆற
தான் பசியோடும் பஞ்சத்தோடும்
அல்லல் படும் அவர்களின்
வேதனை உன்னை உருக்கவில்லையா.....?

உன் வருகைக்காக காத்திருக்கும்
மண்ணும் உழவனும்
உன் பார்வையில் அகப்படவில்லையா.....?

மண்ணில் விளைச்சலை உருவாக்கி
உழவனின் வாழ்விற்கு
உயிர் கொடுக்க வருவாயா......?
மண் மீது மழையாக பொழிவாயா....?

நில மகளை கட்டி அணைப்பாயா...?
எங்கும் பசுமை குழந்தையை
தவழவிடுவாயா.....?

உன் வருகையால்
உருவாகுமே பசுமை எங்கெங்கும்.....
உயருமே உழவனின் வாழ்வும்......

எழுதியவர் : நித்யஸ்ரீ (29-Apr-16, 5:53 pm)
Tanglish : uzhavan
பார்வை : 74

மேலே