அகக்கண்

பிரபஞ்ச
பெருவிருட்சத்தின்
நட்சத்திர பூக்களுக்குள்
தொலைந்து போய்விட்ட
நான் எனும் என்னைத் தேட
ஐம்பொறிகளின் துணை நாடியது
தவறோ என்றுணர்ந்த கணத்தில்
என்னுள் இமைதிறந்தது
அகக்கண் !

எழுதியவர் : ஜி ராஜன் (29-Apr-16, 8:35 pm)
பார்வை : 93

மேலே