உதிரும் தருணதில் உதிரம் சிவந்தேன்

இழைக்கு மண் , இறக்கும் மண்ணில்.
யாரால் நீ உயர்கின்றாய் ,
என்பதனை என்றும் - மறவாதே ...
ஏன் என்றால் அவற்றால் நீ
மறைக்கவும் படுவாய்.............?
வெய்யிலின் வெட்கம், மலையின் தாகம்
பனியின் மோகம், குளிரின் சொர்க்கம் கொண்டே,
மேளிர்ந்தே மென்மை அடைந்து,
மேனிபிழந்து மெய்ச்சிளிர்த்து
உன்னை தளிர்தேன் ,
உன் வளர்ச்சியில் வலி மறந்தேன் ,
நீ வளர்ந்து, காற்றில் தலையசைக்க,
நான் சுகம் பார்த்தேன்,
வான் வளைக்க நீ வளர,
ஆணவம் கொண்டே நான் பிளவுற்றேன்,
நான் தாங்கி நீ ஓங்கினாய், என்பதை மறவாதே....
நீ என்னை மறவயானால்........
என்னுள்ளே நீ மறைந்து போவாய்.......
இது சாபம் அல்ல , இயற்கை..................

எழுதியவர் : ஆனந்த். க (29-Apr-16, 6:37 pm)
பார்வை : 117

மேலே