வலியோடு வெற்றி

வலிகளின்றி வெற்றியேது?
உழைப்பின்றி பிழைப்பேது?
வியர்வையின்றி பொருளேது?
வேதனையின்றி சாதனையேது?

துன்பமின்றி இன்பமேது?
துயரின்றி சிகரமேது?
ஓட்டையின்றி குழலேது?
அடியின்றி ஆயுதமேது?

சூரியனின் வலி வெட்பம்
சந்திரனின் வலி குளுமை
கோள்களின் வலி காலமாற்றம்
வான்வெளியின் வலி சூழல்

வானத்தின் வலி வளிமண்டலம்
காற்றின் வலி தென்றல்
மேகத்தின் வலி இடிமின்னல்
மழையின் வலி நீர்த்துளி

நட்சத்திரத்தின் வலி வான்கோலம்
புவியின் வலி சுமைதாங்கி
கடலின் வலி அலை
அருவியின் வலி ஆறு

விதியின் வலி வேர்
வேரின் வலி தளிர்
தளிரின் வலி துளிர்
துளிரின் வலி இலை

இலையின் வலி காய்
காயின் வலி கனி
அரும்பின் வலி மலர்
மலரின் வலி நறுமணம்

தேனியின் வலி தேன்
பசுவின் வலி பால்
எறும்பின் வலி சேமிப்பு
காக்கையின் வலி ஒற்றுமை

ஒலிகளின் வலி இசை
ஒளியின் வலி வெளிச்சம்
துடுப்புகளின் வலி கரை
துன்பங்களின் வலி இன்பம்

கடவுளின் வலி படைப்பு
தாயின் வலி ஜனனம்
தந்தையின் வலி கல்வி
குருவின் வலி வித்தை

சுற்றத்தின் வலி உறவு
தோழமையின் வலி நட்பு
உடலின் வலி ஆரோக்கியம்
உள்ளத்தின் வலி காதல்

ஓவியனின் வலி ஓவியம்
சிற்பியின் வலி சிற்பம்
கவிஞனின் வலி கவிதை
பாடகனின் வலி பாடல்

கலைஞனின் வலி காவியம்
கருத்தின் வலி உரை
ஞானியின் வலி வழிகாட்டி
மாணவனின் வலி கற்றல்

வியர்வையோடு ஊதியம்
உழைப்பவனுக்கு வெற்றி!
உளியடியொடு மரியாதை
கருவறைச்சிலைக்கு வெற்றி!

துன்பத்தை தாங்குவதே
இன்பத்தின் வெற்றி!
வலிகளை தாங்குவதே
வாழ்க்கையின் வெற்றி!

படைப்பு அனைத்தும்
இயற்வலியோடு இயைந்ததே!
வலியை வலிமையாய்
ஏற்றால் வெற்றிநமதே!

எழுதியவர் : கீதா பாஸ்கரன் (29-Apr-16, 8:39 pm)
Tanglish : valiyodu vettri
பார்வை : 165

மேலே