மனித நேயம்

கொள்கைகளும் கோத்திரங்களும்
மனிதனுக்கு மனித நேயத்தை
கற்றுக்கொடுக்கவே !!!

பாரம்பரியமும் கலாச்சாரமும்
மனிதனுக்கு பண்பினைக்
கற்றுக் கொடுக்கவே !!!

இவைகளை
மனிதன் உதறியநேரம் -
அவன் வாழ்வின்
வடிவத்தை அவனே
அழிக்கும் நேரம் !!!!!!

மனித நேயத்தை -இன்று
பல மிருகங்கள்
செய்கிறதே


நாம் வளர்க்கும் நாய்க்குட்டி
நாம் தடுமாறி விழும்போது
கத்தி குரைத்து கூச்சலிட்டு
தன் அன்பை வெளிகாட்டுகிறதே !!!!

நம் காலிடைச் சுற்றும் பூனை
நாம் அடிக்கும் அடி யினைப்
பொறுத்து நம் வீட்டுப்
பொருட்களை பாதுகாக்கிறதே !!!!

அந்த அன்பினை இன்று நாம்
நம் சொந்தப் பிள்ளைகளிடம்
எதிர்பார்ப்பது மிகவும்
அரிதாகிவிடுகிறதே!!!!

அவர்களுக்கு என்று தனி
மரியாதைக் கொடுத்து நாம்
இன்று அந்நியர்களாகி
நிற்கிறோமே!!!!!!

குரங்கு ஒன்று சாலையில்
அடிபட்டால் அதைப்
பார்க்கும் மற்றக்
குரங்குகள் அதை
சாலையின் ஓரத்தில்
அப்புறப்படுத்துகிறதே!!!!

அதே ஒரு மனிதன்
அடிபட்டு சாலையில்
இரத்தவெள்ளத்தில்
சாய்ந்து என்னை
எப்படியாவது
காப்பாற்றுங்கள் எனக்
கதறும்போது
அவனோடு செல்பி
எடுக்கவும் அவனது
உடைமைகளைப்
பறிப்பதுமே- இன்றைய
மனித நாகரீகத்தின்
செயலாக மாறிவிட்டதே!!!!

குரங்கிற்கு இருக்கும்
ஈவுகூட இன்று
மனிதனுக்கு காட்ட
தெரியவில்லையே !!!!

பெற்றத் தந்தையையே
தடியால் அடித்து கொன்றும் ,
காலால் எட்டி உதைத்தும்
இரவின் இருளில் வெற்று
உடலுடன் சாலையில்
துரத்தும் மகன்களுக்கு
ஏது மனித நேயம் !!!!!!!

தாயை அழைத்துச் சென்று
முதியோர் ஊதியத்தை
பெறவைத்து ,
அதைப் பிடுங்கித்
தான் வைத்து திரும்பிச்
செல்ல பஸ்சிற்கு
பத்து ரூபாய்க்
கொடுத்து அனுப்பும்
மகன்களுக்கு ஏது
மனித நேயம் !!!!!

நேற்று நல்லுடலுடன்
நல் சிந்தையுடன்
நன் மரியாதையுடன்
நன் மதிப்புடன்
வாழ்ந்த ஒருவர்
ஓர் இரவில் தன்
சிந்தை மாறிய
நிலைத் தடுமாறிய
நிலைக்கு வரும்போது
அடுத்த நாளே
தன் பிள்ளைகள் கூடியிருக்க
அனாதையாக்கப்
படுகிறாரே!!!!!!!!!!

எத்தனை தாய்மார்கள்
தன் வேலை கவ்ரவம்
அந்தஸ்து என அனைத்தையும்
துறந்து தான் பெற்றப்
பிள்ளையை எவ்வித
குறைவும் இன்றி
வளர்த்தார்கள்!!!!!

இன்றோ அந்தத் தாய்
தன் வயோதிபத்தால்
வழுக்கி விழுந்து
பராமரிக்க ஆளின்றித்
தனிமையில் விடப்பட்டு
வேறு வழியின்றித்
தவிக்கிறாள் !!!!

அவள் வளர்த்தப்
பிள்ளையோ என்
தாயால் என் வேலை
கெடுகிறது !!!
இவரை வைத்துப்
பார்க்க முடியவில்லை
எங்காவது இலவச
பராமரிப்பு மையம்
இருந்தால் அங்கு
இவரைச் சேர்த்து
நேரம் கிடைக்கும்
போது சென்று பார்த்து
வரலாம் என யோசிக்கும்
மகனுக்கு ஏது
மனிதநேயம் !!!!!!

இப்படிப் பண்பினை மறந்து
அன்பினைத் துறந்து
அரைசாண் வயிற்றுக்கு
யாரையும் ஊதாசினப்படுத்தும்
மனிதத் தன்மையற்ற
மனிதநேயத்தை
தூக்கி எறிந்து
உண்மையான மனித
நேயத்தை
மிருகங்களிடமாவது
கற்போம்!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (30-Apr-16, 12:18 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 1150

மேலே