உனக்குள்ளே நான்
இதழை இதழலால் இசைத்தேன்
இருவிழி மூடிட தடுத்தேன் -உன்
இதயம் துடிப்பதை ரசித்தேன்
இவைகள் தொடர்ந்திட துடித்தேன்
மேலாடை போலவே உன்மேனிதனில்
பரவிக்கிடந்த நொடியில்
ஈரய்ந்தாய் விரல்கள் பரப்பி
ஆராய்ந்தாய் நீயும் புறமென்னை
இடை வெளியில்
இடைவெளியி;ல்லாதே இணைந்தேன்
நின் தேகசிலிர்ப்பினை
தீண்டியணைத்தே தணித்தேன்
உன் மூச்சுக்காற்றினில் மோதியொலித்த
மோகமொழிதனில் மூழ்கி திளைக்கிறேன்
ஒற்றை எழுத்தில் நீ உச்சரித்த காதலுரைகள் மட்டும் -என்
காதில் ஒடி ஒலிக்குதடி
உனக்குள்ளே நான்
உருகியுருகிக் கசிந்தேனடி