வேறு என்ன நான் கேட்பேன்

உனக்காக என்ன வேண்டுமானாலும் வாங்கி தருவேன் கேள்

வானத்தை உனக்கு படுக்கையாக்கவா...
நட்சத்திரத்தை உனக்கு நெத்திச்சுட்டியாக்கவா
வான் நிலவை உனக்கு வெள்ளை திருஷ்டி பொட்டு வைக்கவா

கேள் !
நீயே கேள் !
எதை வேண்டுமானாலும் கேள் !
அது எங்கே இருந்தாலும்
உன் காலடியில்
கொண்டு வந்து சேர்ப்பேன்

தீப்பெட்டி வேண்டாம்
சிக்கிமுக்கி போதும்

மின்விளக்கு வேண்டாம்
இராந்தல் போதும்

நகரம் வேண்டாம்
கிராமம் போதும்

குளிர்பானம் வேண்டாம்
பானை நீர் போதும்


எம்மொழியும் வேண்டாம்
தாய்மொழி போதும்

வேகம் வேண்டாம்
நிதானம் போதும்

ஆத்திரம் வேண்டாம்
அன்பு போதும்


பிட்சா பர்க்கர் வேண்டாம்
கூழ் போதும்


கொள்ளை வேண்டாம்
கொலை வேண்டாம்
இல்லை போதும்

கோடிகள் வேண்டாம்
சில்லறைகள் போதும்

நகைகள் வேண்டாம்
உன் புன்னகை போதும்

எதுவும் வேண்டாம்
நீ மட்டும் போதும்



~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Apr-16, 4:26 pm)
பார்வை : 187

மேலே