காதல் ரோஜாவின் முட்கள் 555

காதல்...

வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டும்
வரைய முயற்சிக்கும் ஓவியம்...

கைகளில் தூரிகை
இருந்தாலும்...

வண்ணங்கள் விழிகளில் இருப்பதால்
தெரிவதில்லை சில முட்கள்...

அதிகாலையில் மலரும்
ரோஜாவை ரசிக்கும் நாம்...

அதனுடன் வளர்ந்த முட்களை
ரசிக்க மறந்துவிடுகிறோம்...

பருவ வயதில் காதல்
வருவதும் அப்படிதான்...

ரோஜா என்று நினைத்துவிட்டு
பறிக்க முடியாமலும்...

பறித்தால் தூக்கி
எரியமுடியாமலும்...

துடிக்கிறார்கள் பலர்
இன்று காதலில...

காத்திருந்து வரையும்
ஓவியம் அழகு பெரும்...

அவசரத்தில் வரையும்
ஓவியம் அலங்கோலம் ஆகும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Apr-16, 8:51 pm)
பார்வை : 316

மேலே