தமிழனாக வாழ்பவனுக்கு தமிழன் என்றுமே பக்க பலம்

இந்தியன் இந்தியனை
புறம் தள்ளுவதில்லை
இந்தியனுக்கு அந்நியனை
மட்டுமே புறம் தள்ளுகிறார்கள்

அன்பின் வடிவானவர்களையும்
பண்பின் உருவானவர்களையும்
பதவியில் ஏற்றி அழகு பார்த்த
பாரத பூமி இது !!!!!!!!!!!!!!!!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து
வந்த அன்னை தெரசாவையே
சமாதானப் புறாவாய் போற்றி
வழிபட்ட புண்ணிய பூமி இது!!!!!!!!!

பெண் சிசுக் கொலையை தடுத்து
குழந்தைகள் காப்பகம் அமைத்த
ஏமி கார்மைக்கல் அம்மாவை
இன்றும் அன்னையாக வழிபடும்
வணக்கத்திற்கு உரிய பூமி இது !!!!!!!!!!!!

அன்னை சாரதா தேவியை
அன்பின் வடிவமாய்
போற்றும் புகழுக்கு உரிய
பூமி இது!!!!!!!!!!!!!!


முத்து லட்சுமி பண்டிட்
கை விளக்கேந்தியக் காரிகை
கவிக்குயில் சரோஜினி நாயுடு
அன்னி பெசன்ட் அம்மையார்
இப்படி எத்தனை நாட்டினரை
நம் இனத்தவராக
நாட்டவராக , நம் மொழியினராக
நம் உறவினராக நம் சொந்தங்களாக
எண்ணிய போற்றிய உறவாடிய
உன்னத தேசம் நம் இந்திய தேசம் !!!!!!!!!!!!

குஜராத்தியரான காந்தியடிகளை
தமிழனாக பாவித்து மகாத்துமாவாக
மகுடம் சூட்டி மகிழ்ந்த பூமி இது!!!!!!!!!!!!!!!!!!!

இவர்களுக்கு இல்லையா ஜாதி ?
இவர்களுக்கு இல்லையா மதம் ?
இவர்களுக்கு இல்லையா குணம் ?
இருந்தும் நம் நாடு இவர்களை
ஏற்றுக் கொள்ள வில்லையா?

இவர்கள் எந்த பதவிக்கு
ஆசைப் பட்டு இந்த நாட்டிற்கு
வந்தார்கள் !!!!!!!!!!

எப்படி வாழ ஆசைப் பட்டு
இந்த நாட்டிற்கு வந்தார்கள் !!!!!!!!!

எந்த உறவை எதிர்பார்த்து
எந்த ஜாதியை எதிர்பார்த்து
இந்த நாட்டிற்கு வந்தார்கள் !!!!!!!!!!!!!

ஜாதிகள் கடந்து,மதங்கள் கடந்து
மொழிகள் கடந்து
வேற்று நாட்டினரையும்
நம் இனத்தவராக
எண்ணினோமே !!!!!!!!!!

நம்மை நாம் இகழ்தல்
என்பது நமக்கே ஏற்பட்ட இழிவு !!!!!!!!!!!!!!!

அந்த இழிவுக்கு நாம் பொறுப்பல்ல
நம்மில் சிலரே
நம்மை பிரிக்கும் முயற்சியில்
இறங்கி தோல்வியை சந்திக்கிறார்கள் !!!!!!!!!!!!!!!

அந்த தோல்வியை நாம் நிச்சயம்
பாராட்ட வேண்டும் !!!!!!!!!!!!

ஏனெனில் ,
அந்த போராட்டத்திலும்
நாம் இன்றும் வெற்றி வாகையை தான்
சூடுகிறோம் !!!!!!!!!!!!!!!

இது வரை எந்த ஜாதிக்கட்சி யும்
தமிழனையும் , இந்தியனையும்
பிரிக்க முற்பட்டு பின்தள்ளப்
பட்டதே நமக்கு கிடைத்த
முதல், மாபெரும் வெற்றி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (1-May-16, 9:20 am)
பார்வை : 168

மேலே