தடை நல்லது

அழகிய நீர் வீழ்ச்சி
அதைப் பார்த்து ரசிக்கும்
மக்களோ ஏராளம்
அதில் நீராட ஆசை
ஆனால் அந்த நீர் வீழ்ச்சியில்
குளிப்பதற்கு தடை என்று எழுதப் பட்டிருந்தது
இருந்தாலும் அதன் அழகை
கமரா மூலம் படம் எடுத்து கொண்டனர் பலர்
குளிப்பதற்கு தடை போட்டு விட்டார்களே
மிகுந்த ஆர்வத்துடன் வந்த மக்கள்
அந்த நீர் வீழ்ச்சியை கமராவுக்குள் பிடித்து
செல்வதைத் தவிர வேறு வழி இல்லை
இயற்கையின் அற்புதம் அந்த அழகு
இறைவன் படைப்பில் எல்லாமும் அதிசயமே
மனிதன் எதனை எப்படி அனுபவிக்க வேண்டுமோ
அதற்கு ஏற்றபடி
இயற்கையை அள்ளி அள்ளி விதைத்து
விட்டுவிட்டான் நம்மிடம்
இன்பமா இனிமையா நன்மையா நாகரீகமா
எடுத்துக் கொள் கற்றுக் கொள் தகுந்தாற்ப் போல்
ஆனால் தீமையை மட்டும் விலக்கிக் கொள்
முதல் மனிதன் ஆதாம் ஏவாளுக்கு கூறியது போல்
அதையும் கூறி வைக்கின்றான் மனிதன்
தீமை தடை என்று கண்டு விட்டால் தீண்டவே தீடாதே
அதுவே நாம் அடையும் நன்மையும் நலமுமாகும்
அறிவும் அன்பும் கொண்டவனே
இந்த தடை எனும் வார்த்தையும் ஆகியிருப்பான்
நல்லதற்கு நாம் நலமுடன் வாழ்வதற்கு
நல்லவன் எழுதி உள்ள தடை நன்மைக்கே

எழுதியவர் : பாத்திமாமலர் (1-May-16, 11:01 pm)
Tanglish : thadai nallathu
பார்வை : 73

மேலே