புதியதோர் உலகம் செய்வோம் - தொழிலாளர் தினம் கவிதை போட்டி

பசுமை பசுமை எனது பாரதமெங்கும் பசுமை
என் கிராமத்தில் எங்கும் பசுமை
என் பாட்டன் உழுத பசுமை
வரட்சிக் காண பசுமை
வழியெங்கும் பசுமை

ஏற்ப் பூட்டி உழுகையில் கொளுத்தும் வெயில் அறியாது
வீட்டிலிருந்து கொண்டுவரும் காஞ்சி நெஞ்சை நனைக்கையில் இன்னும் கலப்பையில் கை இறுக்கி பிடிக்கும்

நாத்து நட சேத்தில் கால்வைத்து பதிக்க
குலவை சத்தம் குதுகலமாக நட்டு முடிந்த நாத்து வெட்டியெடுத்து அறுவடை ஆரம்பிக்கையில் மனதில் இன்பமது ஆனந்தமே ,

இந்த ஒட்டு மொத்த வார்த்தைகளும் இன்று கட்டிடங்களாக போக வறண்டிருக்கும்
நமது பாரதம் மீண்டும் செழித்துட புதியதோர் உலகம் செய்வோம் ஒன்றாய் இணைந்து .

படைப்பு:-
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (30-Apr-16, 9:58 pm)
பார்வை : 88

மேலே