மரங்கள் மாந்த னின் வரங்கள்

சுய நல மனப்பாங்கு மேலோங்கி
எம்மை காக்கும் மரங்களை அழித்து
மரத்தில் வாழும் பறவைகளின் வாழ்வை யும் சீர் குலைத்து
அவைகளையும் கண்ணீர் சிந்த வைத்து
மனிதன் தன் சுகம் அடைந்தான்

சூரியனும் தன் கதிர்க்கை கொண்டு
இயற்கைக் குழந்தையை அரவணைத்து நிக்க
மாந்தன் வாழ்வு அழிந்து போகமால்
மரங்களும் நிழல் கொடுத்து துணை நிக்க
மனிதனோ எவ்வித உணர்வும் இன்றி
மரங்களை அழிப்பதை விரும்பி
மரணத்தை வரவழைக்கிறான்

வெயில் கொடுமைக்கு தீர்வு தேடி ஓடும் மனிதா
இயற்கையுடன் இணைந்து பயணம் செய்தால்
நீயும் நலம் வாழலாம் இல்லை எனில்
நீயும் அழிந்து போவாய் !

எழுதியவர் : கலையடி அகிலன் (3-May-16, 5:02 pm)
பார்வை : 240

மேலே