நீயின்றி
விதை விதைக்கின்றேன்
வீரியமிக்க கவிதையொன்றிற்கு
வற்றிப் போகிறது
என் கற்பனையூற்று
வரண்டுப் போகிறது
என் வார்த்தைகளின் வளம்
உலர்ந்துப் போகிறது
என் உணர்வுகளின் களம்
நீரற்றுப் போகிறது
என் அனுபவங்களின் அணை
வரைமுறையற்றுப் பாய்கிறது
என் எண்ண அலைகள்
நீரற்றப் பயிராய்
என் கவிதை வளர்ப்பு கடினமே
நீயின்றி