பொறுப்பு

*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-May-16, 6:02 am)
Tanglish : poruppu
பார்வை : 139

மேலே