கட்லா மீன்கள் பற்றிய தகவல்கள் - தெரிந்துகொள்வோம்

கட்லா (Catla) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவும் வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

இம்மீன் பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.

இதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள வலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இந்நுண்ணுயிர்களை சலிப்பதற்கு வசதியாக இம்மீனின் செவிள் கதிர்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. இது இயற்கை உணவைத்தவிர தரப்படும் மேல் உணவையும் (Supplementary food) உண்டு ஓர் ஆண்டில் 1 முதல் 1.5 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (2-May-16, 9:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 169

மேலே