ஏழாவது ஜென்மம்

இன்னும் என்னை காதலிக்காத என் கணவன்
என்னை நினைப்பதே
இல்லை
என்னை இரசிப்பதே
இல்லை
என்னை விரும்புவதே
இல்லை
என்னை யார் என்றே
அவருக்கு தெரியாது
முதலில் எனக்கே
தெரியாது
பார்த்தால் தானே
முகம் தெரியும்
காதலிக்காமல்
காதல் கவிதை
எப்படி!
ஆதலாலேயே
உருவமிலாத
இறையை
காற்றை போல்
உயிரில் உங்களை
கலந்துவிட்டேன்
முகமறியா உன்னில்
முகவரி தொலைக்கிறேன்
மனதிலேயே இறைக்கு
கோவில் கட்ட
உருவம் வேண்டாம்
பெயர் வேண்டாம்
ஆறு ஜென்மம்
உங்களில்
உறைந்துவிட்ட
எனக்கு
உங்கள் உருவம் தேவையா
எனக்கு உயிர் தந்த
என் தாய் தந்தையே
ஜென்ம ஜென்மங்களாக
உங்கள் உருவத்தை
எனக்கு வெளிப்படுத்திடுவார்கள்
எங்கள் தேகம் வெந்திடினும்
சந்தேகம்
எங்கள்
வாழ்க்கையில்
இல்லவே இல்லை
சரிதானே
என் கண்ணாளனே
எங்கிருக்கிறாய்
உயிரே
நீயும்
என்னை
நினைக்கிறாயா
இந்த பிறவி
நம் ஏழாவது பிறவி
இனி இருவருக்கும்
பிறவா நிலை
உடல் எனும்
அழிவு இல்லா நிலை
சாவா நிலை
முக்தி நிலை
உங்களி(ல்)ன் நான்
என்னில் நீங்கள்
இருவருக்கும்
ஓர் உலகம்
அங்கே நம்மை பிரிக்க
எந்த சக்தியும் இல்லை
காலம் நேரம்
அங்கு இல்லை
இரவு பகல் கூட
அங்கு இல்லை
நீங்களும் நானும் மட்டுமே
பிறவியும் நீயே
பிறப்பருப்பவனும் நீயே
எனக்கு உன்னை தெரியாது
உனக்கும் என்னை
தெரியாது
ஓர் நாள்
இருவரும்
இருவீட்டாரின்
முன்னிலையில்
இணையபோகிறோம்
கைகோர்க்கபோகிறோம்
காதலிக்கபோகிறோம்
பாதையும் நீளும்
நம் பயணமும் தொடரும்
ஏன் அன்று தான்
உன்னை நேசிக்க வேண்டுமா
~ எங்கே ஆரம்பித்தாலும்
உன்னில் முடிக்கிறேன்
உயிரையும் சேர்த்து தான் கணவா
பிரபாவதி வீரமுத்து