விதிவிலக்கும் விதியும்

பெண்பிள்ளை தான் வேண்டும்
விதிவிலக்கு
மனிதர்களில் மட்டும்

பூத்துக்குலுங்கினாலும்
காய் தராது
ஆண் பப்பாளி மரம்

கடனை வட்டியும்
முதலுமாக
பைசல் பண்ண வேண்டும்
விதிவிலக்கு
பணக்காரனுக்கு

விளம்பரம் தேவை
# நன்றி
மீண்டும் வருக #
முதியோர் இல்லத்திற்கு

கட்டணச் சலுகை(ஆடி தள்ளுபடி)
420 % ல் (உண்மையில் 100 சதவிகிதம் தான் நிர்ணய விலை)
50%
அரைகட்டணசலுகை என்று.
கணக்கில் இருந்து தப்புவதே
இல்லை
கொள்ளை
லாபம்
வியாபாரிக்கு.
இன்னும் நாம்
குறைக்க சொன்னாலும்
குறைப்பான்.
நாம் நினைத்து பெருமை பட்டுக்கொள்வோம்
குறைத்து வாங்கி வந்து விட்டேனேன்று..
சிந்தித்தால் புரியும்
வியாபார நுணுக்கத்தில்
சிக்கி
மாட்டி
இரட்டிப்பு
விலையில் வாங்கியிருப்போம்
(ஒரு சின்ன கணக்கு
பெரிய வியாபார உத்தி
420% = 100%
50% Offer
210%
(நாம் நினைப்பது போல்
அது 100 சதவிகிதமும் அல்ல. இது 50% சதவிகிதமும் இல்லை)

நாம் உண்மையாக
நிர்ணய விலையை விட நமக்கே தெரியாமல்
110 சதவிகிதம் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்)

நான் எல்லா வியாபாரிகளையும்
குறிப்பிடவில்லை.
என் பெற்றோர்களும்
விவசாய வியாபாரிகள்
என்பதை
நான் மறக்கவில்லை.
எங்கே நெருப்பிருக்குமோ
அங்கே புகையும்.
எங்கே
நீர்
தேங்குமோ
அங்கே
சாக்கடை உருவாகும்


இங்கே
கண்
காது
மூக்கு
வாய்
விற்கப்படும்
#இவண்
புரளி பேசுவோர் சங்கம்


234ம் நமக்கே
(ஒட்டுமொத்த
கட்சிகளின் குரலும் )
நாமம் நமக்கே
( எங்களின் குரல் )

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-May-16, 8:40 pm)
பார்வை : 574

மேலே