சிந்துப்பாடல் --- காவடிச்சிந்து -- 5

ஆசுகளை நீக்கிவிடும் நேசன் -- அவர்
ஆசிதனை நாளுந்தரும் தாசன் -- அந்த
அன்புநிறை பண்புமிகு ஆண்டவனின் பாதந்தொழப்
பாரு -- நலம்
சேரு.


வெற்றிகளும் வாழ்வினிலே சேரும் -- யான்
வேண்டுவதை வேண்டும்வழி தாரும் -- என்றும்
வேந்தனுனை நாடிடவும் வெந்தழலைப் போக்கிடுவாய்
நாளும் -- எந்
நாளும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-May-16, 10:04 pm)
பார்வை : 43

மேலே