காந்தி

அது ஒரு பாலியல் தொழிலாளியின் வீடு,

அந்த வீட்டின் நடுவே காந்தியின் புகைப்படங்கள் மாட்டப் பட்டிருந்தது ,

அந்த விபச்சாரியின் வீட்டிற்கு வந்த ஒரு புது வாடிக்கையாளர் அங்கு மாட்டப்பட்டிருந்த காந்தியின் புகைப்படங்களை பார்த்து விட்டு

நீயோ கற்பை விற்பவள் வெட்கம் கெட்டவள் ,மானம் என்பதே இல்லாதவள் ,அப்பேற்பட்ட நீ இந்த விபச்சாரம் செய்யும் வீட்டில் கொண்டு வந்து காந்தியின் படத்தை மாட்டியிருக்கிறாயே ,

காந்தியோ தூய்மையானவர் அவரின் படத்தைை இங்கு எதற்கு மாட்டியிருக்கிறாய் உன்னால் அவருக்கு கறை படிந்திடாதா என்று கேட்டார்,

அதற்கு அந்த விபச்சாரி இங்கு வரும் வாடிக்கையாளர்களெல்லாம் சுகத்திற்காக முதலில் என்னை தேடித்தான் வருவர் ,வந்தவர்கள் இங்கு மாட்டப்பட்டிருக்கும் காந்தியின் படத்தை பார்த்து விட்டு மனம் திருந்தி சென்றுவிடுவர்,ஆதலால் நான் இன்னும் சுத்தமானவளே, என்று கூறினாள்,,

பிறகு ,அந்த புது வாடிக்கையாளர் காந்தியின் படத்தை தொட்டு கும்பிட்டு விட்டு வெளியே சென்று விட்டார்,,





-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (5-May-16, 10:34 am)
Tanglish : gandhi
பார்வை : 305

மேலே