மர்மம் என்ன

காய்த்து வளர்ந்து கிடக்கும் பணம்
பறிக்க விருப்பம் இருந்ததேயில்லை.

காய்ந்து தவிக்கும் நிலம் மலர
பயிர் விதைக்கவே விருப்பம்.

வந்து நிற்பதில் வழக்கொன்றுமில்லை
வருடம் சென்றுவிட்டபின் வரும்
சின்னத்திரை, உரசும் காசிகொண்ட
இளவேனில் காலத்தாய் பாடுகிறேன்.

வாழ்ந்து முடித்து விட்டு பின்
தொண்டையினுள் ஒரேயொரு விக்கலை
விட்டுவைக்க நினைக்கவில்லை.

பழகிய சாலைதான் இது ஆனாலும்
பாதையில் சிலபல தடைக்கற்கள்.

விலகிச் செல்ல இனியும் வழியில்லை.
விரைந்து வர இறை அருளட்டும்.

விடை கிடைத்துவிடும் ஆனாலும்
வந்துகாணமல் சென்றதின்
மர்மம் மட்டும் உரைத்திடு.

எழுதியவர் : jujuma (20-Jun-11, 5:05 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 329

மேலே