உறக்கம் தாெலைத்த இரவு

எச்சில் செய்த பஞ்சு மிட்டாய்
பாதியாக காக்காகடி கடித்து தந்த
கடலை உருண்டை
மண் குழைத்து சமைத்த
கூட்டஞ்சோறு போக்கிய பசியினை-மீண்டும்
தூண்டிவிட்டு போனது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.....

கோவில் திருவிழா ராட்டிணத்தில்
தனிதனியாக ஏறிக்கொண்டு
கைக்குட்டையை யார் வைப்பது யார் எடுப்பது என்று
மகிழ்ந்திருக்க -இறுதியாக
நீ வைக்காமலேயே போனதில்
களவு போன நாட்களை உயீரூட்டுகிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.....

பின்னிய தென்னங்கீற்றுக் குள்ளாக
நீ மறைந்திருக்க
சிறிய இடைவெளியில்
உனது விழிகள் எனை மேய ஏற்பட்ட கிறக்கத்தை
மீண்டும் விதைக்கிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.....

ஒரு பனிகாலத்தில்
அதிகாலை வேளையில்
எனது அறையினுள் யாருமில்லை என்பதை
உறுதி செய்து கொண்டு
கம்பளி போா்வைக்குள்ளாக உன்னை மறைத்து
எனது வலது கையினை எடுத்து
உனது மார்புக்கு குறுக்காக வைத்து
உறங்க ஏற்பட்ட கதகதப்பை தருகிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.......

மிதிவண்டியில் இரு கைகளுக்கும்
இடையேயுள்ள இடத்தை
எப்போதும் பூர்த்தி செய்து இன்பத்தில்
புன்னகைக்கும் உன்முகத்தை
சாமியாடியின் உடுக்கைக்கு பயந்து
முதுகுக்கு பின்னால்
ஒளிந்து மறைந்து கொள்ளும்
உன்முகத்தை வரவைக்கிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு......

யாருமற்ற புல்வெளியில்
வைக்கோலுக்கு பின்னால்
உன்மடியில் நான் படுத்து
முத்தம் பதித்த கண்ணத்தில்
கைரேகை பதிய
அடித்து சிவந்திருக்க
பொருத்தம் பத்தவில்லையாம்
மறந்துவிடுங்கள் என்று
அழகையை அடக்கிக் கொண்டு
ஓடிய உன்னை
ஒவ்வொரு நாளும் நினைவூட்டுகிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு...........

எழுதியவர் : பிரசன்னா (6-May-16, 7:06 pm)
பார்வை : 663

மேலே