கனவு இல்லம்

பரபரவென்று...
காலை எழுந்து ...
குளித்து...
காலை கடமைகள்...
முடித்து...
பறவாய் பறந்து...
அலுவலகம் சென்று...
என் அறை
கதவை திறந்தேன்...
காற்று வரவில்லை...
கவலைதான்...
வந்தது...
இருக்கையில் அமர்ந்து...
இழுத்து ஒரு பெருமூச்சு....

பசி மறந்து...
பற்பல வேலைகள்...
பாதி நேரம் அலைபேசியில்....
இடை இடையே
இடர்பாடுகள் பல ..

என் குட்டி சொர்க்கம்...
என் உணவு கூடம்....
கூடி களிக்க,
நட்பு வட்டம்...
பல மணி துளிகள்...
இன்ப -மாய் கரையும்....

உணவில்லை..
என்ற வார்த்தை...
ஒரு போதும் கேட்காது...

இனிய உணவால் மட்டுமல்ல...
உணர்வுகளாலும்....
ஆனேன்... அகலமாய்...

என் உணவு கூட சன்னல்...
காட்டும் இன்னொரு உலகம்...
ஒரு புறம் வாகன இரைச்சல் ,
இயந்திர மனிதம்...
எரிக்கும் வெயில்...

என் சன்னலுக்கு வெளியே...
பச்சை புரட்சி....
சென்னை மாநகரம்...
சிந்தை விட்டகலும்...
அடுத்த வீ ட்டு தோட்டம்...
அழகழகாய் மரங்கள்...
பின் வீடு...
எனக்கு பிடித்த வீடு...
மொட்டை மாடி மட்டும் பார்த்தே...
மொத்தமாய் காதல் கொண்டேன்!!!

எதிரே ஒரு அரச மரம்...
அதிலும் ஒரு ஆலயம்...
அநேகமாய்...
அது பிள்ளையார்தான்....

வீட்டை ஒட்டி ஒரு மாமரம் ...
பூவும் பிஞ்சுமாய்...
பூத்து குலுங்கும்
என் காதல் குயில்...
அந்த மரத்தில்....
தங்கி இளைப்பாறும்...
இசைபாடும் அவ்வப்போது....
கருத்த மேனியும் ....
சிவந்த விழிகளும்....
"குக்கூ" இசையுமாய்...
குலவிடும்... குயில்...

என் அலுவலக...
"கிசுகிசு"வில்...
என் குயில் காதல்...
அடிக்கடி....

என் தினசரி வாடிக்கை...
சன்னல் வழியே வேடிக்கை....

என் சொந்த ஊரில்...
விட்டு வந்த...
வீடு... தோட்டம் ..
அணில் ... பறவைகள் ...
இலை ஊறும் நத்தை...
மலர் தேடும் தேன் சிட்டு...
வானவில் உடை அணிந்த...
வண்ணத்து பூச்சி...
என்ற பெரிய பட்டியலில்...
சிற்சில...
என் கண் முன்னே...
தினம்.... தினம்...

வழக்கம் போல் ...
மற்றும் ஒரு காலை ...
அலுவலக பணிக்கு...
நடுவே...
அலைபாய்ந்து...
கொண்டு... நான்....

"டமார்" "டமார்" என்று...
இடியோசை...
உணவு கூடம்...
உடைந்து விட்டதோ...
என்று...
விதிர்த்து எழுந்து...
ஓடி நோக்க....

சத்தம்...
சன்னல் பக்கமிருந்து...
சலனமுற்று... நோக்க ....

விழுந்த அடி...
ஆழமாய் மனதில்....

பெரும் கடப்பாரைகள்...
பிளந்து கொண்டிருந்தன....
உதிர்ந்து கொண்டிருந்தது...
அந்த உன்னத வீடு...

சாய்ந்து கிடந்தது...
பூவும், பிஞ்சுகளுமாய்...
சவம் போல்...
அந்த பூமரம்... என் மாமரம்....

கண் முன்னே...
என் கரு கலைந்தது போல்...
ஒரு பெண்ணுணர்வு!!!

அடி வயிறு கலங்கியது....
அழுகை வந்தது....
விளக்க முடியாத...
வினோத உணர்வு...
ஒவ்வொரு கல்லும்...
விழும் போது...
ஓலமிட்டது உள்மனது....

எத்தனை...
உறவுகள்...
பிரிவுகள்...
இன்பம்...
துயரம்...
ஊடல் ....
கூடல்...
சிரிப்பொலி...
கண்ணீர் துளி..
குழந்தை சத்தம்...
குமரியின் முத்தம்....

ஒவ்வொரு கல்லிலும்...
ஒளிந்திருக்கும்...
எதோ ஒரு
வண்ண சிதறல்....
எண்ண கதறல்...

"குக்கூ""குக்கூ"
என் குயிலின்...
கூக்குரல்...
குடியிருந்த....
வீடு...
காணாத சோகம்...
குமுறியது... குயிலின் குரலில்....

மாலை வெயிலில்
விழுந்த கிடந்த...
மரத்தின் இலைகள்...
பொன்னிலைகளாய்...
படபடத்தன...
பிரிய மனமில்லாமல்....

சன்னலை விட்டு நகர்ந்தேன்....
சவமாய் நான்....
பின்னால்...
உயிரடங்கி....
ஓய்ந்து கொண்டிருப்பது ...
யாரோ ஒருவரின்...
"கனவு இல்லம்"

மடங்கி... மண்டியிட்டு...
மனமாற ... அழ விரும்பி...
மரியாதை நிமித்தம்...
மனதுள் அழும்..... - ஆனந்த் வி

எழுதியவர் : ஆனந்த் வி (7-May-16, 1:27 am)
Tanglish : kanavu illam
பார்வை : 618

மேலே