காதல் என்பது - 8
காதலில் மட்டும்
காமம் இல்லை
காதலில்லா திருமண
பந்தத்திலும் காமம் உண்டு
காமனை வென்றால்
காதலில் ஜெயிக்கலாம்
காதலில் ஜெயித்தால்
ஆனந்த வாழ்க்கை வாழலாம்
காதல் வயப்படும் பொழுது
எதுவும் தோன்றாது
தான் யார்,
தன்னை சூழ்ந்திருப்பவர்கள் யார்
இதுநாள் வரை தமக்கு பாதுகாப்பு
கொடுத்தவர் யார் யார்
காதலில்,
முதல் நொடியில் வருவது
ஈர்ப்பு
பின் வருவது புரிதல்
பரஸ்பரம் புரிதல் இருந்தாலும்
சுற்றத்தின் அங்கீகாரம்
வேண்டும்
உறவின் அனுமதி
முக்கியத் தேவை
இவை இரண்டும் கிடைத்தால்
அந்த காதலே சொர்க்கம்
பின் அந்த காதலின்
பயணமோ வெகு சுலபம்
இந்த பாக்கியம் பெற்றவர்
மிக சிலரே
இது இல்லாதோர்க்கு
இருக்கவே இருக்கிறது
நட்பு வட்டம்
நட்பு காதலை ஊக்குவிக்கும்
அது தன் தலையாய கடமை
என தானே நினைக்கும்
காதலுக்கு உதவுவது
புண்ணியம் செய்வதற்கு
சமமான செயல்
என நினைக்கும்
நட்பு...
காதலுக்கு பாலமாக
இருக்கும்
அதனால்
அது காதலாக
மாறாது
காதலர்களுக்கு
உதவுவதில்
ஒரு இனம் புரியா
சந்தோசம் உண்டு
அது நட்பால் மட்டுமே
சாத்தியம்
இந்த காதல் ஜோடிகளும்
காதலின் அடுத்த
கட்டத்திற்குள் நுழைய
முனைந்தனர்
தத்தம் வீட்டில் பகிர
நினைத்தனர்
பின் தான்,
உண்மை உணர்த்திட
இருவரும் அதிர்ந்தனர்
தங்கள் குடும்பத்தை பற்றி
நினைத்து
மிரண்டனர்
ஏன் .......
விரைவில் அறிவோம்
(தொடரும்)