அன்பு

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் ஒரு சிடுமூஞ்சி ,அடுத்தாருடன் எப்போதும் கோபமாகவே நடந்து கொள்வான் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவாமல் அவர்களை அவமானப்படுத்தி அலட்சியமே செய்வான் ,

ஒரு நாள் வியாபாரியின் பக்கத்து வீட்டினுள் திருடன் புகுந்து விட்டான் பக்கத்துவீட்டுக் காரன் எவ்வளவோ கத்தி கூச்சல் எழுப்பியும் வியாபாரி கண்டும் காணாதவாறே இருந்து கொண்டான் அவனின் பணம் அனைத்தும் திருடன் திருடிச் சென்று விட்டான்,

அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரன் வியாபாரியிடம் வந்து நான் அவ்வளவு தூரம் உதவிக்கு கத்தியும் நீ ஏன் வரவில்லை என்று கோபத்துடன் கேட்டான் ,அதற்கு வியாபாரி உதவி செய்வதும் செய்யாமல் போவதும் அது என்னுடைய இஷ்டம் ,என்று கூறி நீ யார் என்னை கேள்வி கேட்க முதலில் நீ என் வீட்டை விட்டு வெளியே போ என்று பக்கத்துவீட்டுக்காரனிடம் வியாபாரி கடுமையாக நடந்து கொண்டான்


வியாபாரியின் நடவடிக்கைகளையெல்லாம் சில நாட்கள் கண்ணோட்டமிட்ட கொள்ளையர்கள்,வியாபாரியின் வீட்டில் கொள்ளையடித்தால் யாரும் உதவிக்கு வர மாட்டர் என்பதை அறிந்து இரவில் வியாபாரியின் வீட்டினுள் புகுந்து விட்டனர்,


கொள்ளையர்களை கண்ட வியாபாரி எவ்வளவோ கத்தியும் ,கூச்சல் எழுப்பியும் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை ,திருடர்கள் வியாபாரியை கட்டிப்போட்டுவிட்டு வியாபாரி இது நாள் வரை சம்பாரித்த பணம் ,நகைகள் என அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்

அப்போது தான் வியாபாரிக்கு உரைத்தது ,செய்த தவறை என்னி வருத்தம் கொண்டான் ,அன்றிலிருந்து வியாபாரி அனைவரிடமும் அன்போடு நடந்து கொண்டான்,








-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (8-May-16, 11:48 am)
Tanglish : anbu
பார்வை : 640

மேலே