வண்ணம் திருடும் நீர்க்குமிழிகள்
நேற்று ஏன் கனவு வரவில்லை..
இறந்துவிட்ட ஒரு மீனை போல்,
கேள்வி ஒன்று மனதில் எழும்பியது..
துக்கத்தால் கனவு வராது போகலாம்..
எனவே,
குடும்ப உறுப்பினர்கள் யாரேனும்
இறந்துவிட்டார்களா என சோதித்து கொண்டேன்.
இல்லை,
மனம் கவர்ந்த காதலி படுக்கையை
மாற்றனோடு பகிரிந்துவிட்டாளா என
பரிசோதித்து கொண்டேன்..
இல்லை.,
விடைல்லாது இருப்பது
விழிமூடாது உறங்குவதற்கு சமமானது..
மருத்துவமனை நோக்கி விரைகிறேன்
அனுமதி சீட்டினை பெற்று,
அறைவாசலில் காத்துகிடந்தேன்..
காலத்தின் கணிதன்களாய்..
முடமாய்,
மூர்க்கமாய்,
குருடாய்,
செவிடாய்,
செவிலித்தாய்,
வாடகைத்தாய்..என
வரிசைகட்டி விதியின் கோலங்கள்..
அச்சம் ஒன்று குடியேற துவங்கியது என்னுள்..!!
மழைகால மேகங்களாய் குற்றஉணர்வு எண்ணமிட,
யாருமறியாவண்ணம் அனுமதி சீட்டினை
வாயில் போட்டு மெல்ல துவங்கினேன்..
அறுவை சிகிச்சையால் மூன்று மார்பகம் பெற்ற
அழகி ஒருத்தி கடந்து போக,
வியப்பில் பிளந்த என் வாயின் ஊடாக,
படித்தறிகிறாள் வன்புணர்ச்சியால் வதைபட்ட சிறுமி ஒருத்தி..!!
கூட்டத்தின் காதுகளுக்கு செய்தி இரையாகி,
இதழ்தோறும் ஆயுதம் முளைத்த
கணமொன்றில்,
திடுக்கிட்டு விழித்தெழுந்தேன் நான் ..!!
என்ன ஒரு விசித்திர கனவு என் வாழ்க்கை..!!