அம்மா

உடல் விட்டு உயிர் பிரிந்து இவ்வூன் அறுந்தாலும்,
என் ஊனுக்குள்ளே உன் உயிர் புதைந்து வெளி புரண்டாலும்....
முதல் வீழ்வதுன் கண்ணின் பிரதியே...
அப் பிரதியின் அழுத்தங்கள் அறிவோம்...

அது உணர்வியலின் உட்புகுந்த முதல் புண்ணகை...
மயிரிலையில் மண்டியிட்டு பூத்த முதல் கதகதப்பு

சில கனங்களில் எங்களை பிழிந்தாய்...
உன்னால் இச்சனங்களில் திரிகிறோம்...

மண்ணையும்,மலை மடுவையும்,
வானையும் அதன் தோரண வாயில்களையும் ...
தொட்டு,பிடித்து துளையாமல் தொடர்கின்றோம்..

எங்கள் உலகம் உம்மால்,
எங்கள் ஓட்டங்கள் உம்மால்...

எங்கள் ஜனனங்களின் முனகல் நீ,
இதோ உம்மை வார்த்தையால் காற்றில் விதைக்கிறோம்....
....அம்மா.....

எழுதியவர் : சிவசங்கர்.சி (8-May-16, 11:44 pm)
Tanglish : amma
பார்வை : 323

மேலே