அம்மா
உன்னின் இருதயத்தில்
என் சுவாசம்
அம்மா
நீ என்னை உன் தோளில் சுமந்தாய் நான் உன்னை என் நெஞ்சில் சுமக்கிறேன்
வலியுடனே
எப்போதும்
உன் விழிகளில்
நான் காண்கிறேன்
என் வலியையே
நிலாச் சோறு ஊட்டினாய்
நம் நினைவுகள் அந்த நிலவிலே
அந்த நிலவையே நான் காண்கிறேன்
உன் நினைவிலே
கடவுளை நான் காண்கிறேன் உன் அன்பில்
அந்த கடவுளையே நான் காண்கிறேன் உன் உருவில்
உன்னையே வணங்குகிறேன்
என் வாழ்வில்
நீ தந்த அன்பை திருப்பித் தரவே
நான் முயற்சிக்கிறேன்
உன் அன்பிற்கு ஈடு செய்ய முடியவில்லை
தாயே