இணைதயத்தில் வாழும் எம் தமிழ்

இணையத்தில் வாழும் என்தமிழ்- மக்கள்
இதயத்தில் வாழும் என்தமிழ்
இணையில்லா இலக்கணம் பெற்றவள் – இங்கு
ஈடில்லா இலக்கியம் பெற்றவள்

இச்சகம் காண்கின்ற தென் தமிழ்-
இணையத்தில் வாழும் என் தமிழ்
இச்சகம் பேசாத தென் தமிழ்-மக்கள்

இதயத்தில் வாழும் என் தமிழ்
அணுக்கண்டு பெயரிட்ட தென் தமிழ்-அந்த
அணுவையும் பிளந்திட்ட தென் தமிழ்
அணுவைப் பிளந்துசத கூறிடும்- துகள்

அதனையும் கோணென்று கூறிடும்
மென்பொருள் காட்டிடு மென் தமிழ்-சொல்லில்
மெல்லினம் காட்டிடு மென் தமிழ்
வன்பொருள் காட்டிடும் வண்டமிழ்-சொல்லில்
வல்லினம் காட்டிடும் தண்டமிழ்

(1,00000, 00000, 00000, 00000, 00000, 00000, 00000)

முப்பத் தைந்துசுழி எண்ணா?-எந்த
மொழியிலும் பெயரிதற்கு உண்டா?
செப்பிடும் செந்தமிழ் அவ் வியத்தம் –இதை
சிந்திக்கும் கணிணியும் வியக்கும்

எழுதியவர் : சு.ஐயப்பன் (10-May-16, 10:37 am)
பார்வை : 212

மேலே