தண்மதி

இளமாலைப் பொழுதினில் தோன்றிடுவாய்
இருள் மங்கிய பொழுதினிலே
குளர்வெனும் போர்வையைப் போர்த்திடுவாய்
வான்மகள் நெற்றித் திலகமே
தோன்றிடும் உன்னால் அலைகளே
பத்தைந்து நாட்களில் தேய்ந்திடுவாய்
மீ்ண்டும் அந்நாட்களில் உருப்பெருவாய்
பரிதியினால் பொங்கும் வெப்பம்
தனிந்து குளிர்ந்திடும் உன்னாலே
தூய்மையன்பு உன்னிற வெண்மை
என்று புரிந்திடும் இம்மாந்தருள்ளே !

- செ.கிரி பாரதி

எழுதியவர் : செ.கிரி பாரதி (9-May-16, 4:40 pm)
பார்வை : 97

மேலே