குறைபிரசவ கவிஞன் நான்
உயிர்கள் பிறந்தன திரவங்கள் சேர்ந்ததில்
நான் பிறந்தேன் உள்ளங்கள் பிரிந்ததில்
அதிர்ஷ்டம் என்றார்கள்
காதலியை தாயாக கொண்டவன் என்று
நான் மறுக்கவில்லை
பரிதாபம் என்றார்கள்
தாயை தொலைத்த மகன் அவன் இன்று
அவளை மறக்கவில்லை
பிரிந்த உள்ளத்தின் புலம்பல் இது
பிறந்த கவிஞனின் கிறுக்கல் இது
பெண்ணை மறக்க வழி கேட்டேன்
மாற்றிவிடு அவளை காவியமாக
உன்னை வர்ணிக்க மொழி ஆய்ந்தேன்
மாற்றிவிட என் கவிதையின் தாயாக
புலமை ஆங்கிலத்தில்
காமத்தை வரைவது போல் எழுத்துக்கள் பிணைந்திருந்தன
ஆதலால் அதை நீ பிரிந்ததில் இருந்து மறந்துவிட்டேன்
தாய்மையான தமிழில்
நம் உறவை செதுக்க எழுத்துக்கள் பிரிவிலும் சேர்ந்திருந்தன
ஆதலால் செம்மொழியில் என் தாய்காவியத்தை படைத்துவிட்டேன்
பார்வதியின் பெயரை கொண்டவளே
உன்னை கொல்வதற்கே
உன் வயிற்றில் பிறந்தவன் நான்
தொலைத்து எட்டு மாதங்களே
பிழை மன்னிக்கும் தாய் நீ
குறைபிரசவ கவிஞன் நான்