சிந்துப்பாடல் --- காவடிச்சிந்து - வகை 2 -- 7
நன்னெறி மேவிட வேண்டும் -- என்றும்
நல்லதை நல்கிட வேண்டும் -- வாழ்வில்
நலமேவிட பலனேதர நிகரேயிலை உறவாயினி
எண்ணம் -- அதன் வண்ணம் .
என்றனின் நெஞ்சமும் துள்ளும் -- மனம்
எந்நாளும் அன்பினில் அள்ளும் -- தினம்
எனவேவிடு மனமேஎன மதியாயினி விதியேயென
எங்கும் -- நலம் தங்கும் .