உழவு

காடோடி திரிந்தவனின் கவலை தீர்த்தது உழவு
நாடோடியாக வாழ்ந்தவனை நாகரிகமாக்கியது உழவு

உலகிலுள்ள தொழிலுக்கெல்லாம் முன்னோடி உழவு
உனக்கும் எனக்கும் உயிர்வாழ உணவளிப்பது உழவு

ஈரடியால் வள்ளுவனும் ஏற்றிப் புகழ்ந்த உழவு
ஆறடியில் அடங்கும் வரை அவசியம் இந்த உழவு

முன்னோர்தம் கைகளினால் முப்போகம் விளைந்திட்ட உழவு
நப்மோர்கள் நஞ்சிட்டு விஷமாகும் உழவு

ஊருக்கே வேலை தரும் உயர்ந்த தொழில் உழவு
பாருக்கே படியளக்கும் சாமிதானே உழவு

எழுதியவர் : மணி அமரன் (10-May-16, 10:22 pm)
Tanglish : uzhavu
பார்வை : 1511

மேலே