காவடிச்சிந்து - 2
பாசமதைப் பொழிகின்ற நேசன் - எனைப்
பாங்குடனே ஆதரிக்கும் தாசன் -அவன்
பாதந்தனைப் போற்றிடவும் மேதகவாய்
வாழ்ந்திடவும்
பாரீர் - புகழ்
சேரீர்
நேசனவன் கண்ணனெனக் கொண்டு - நீயும்
நேயமுடன் வாழ்ந்துவரல் கண்டு -பிறை
நெற்றியுடை மாதவனும் சுற்றிநின்று
காத்திடுவான்
நேர்ந்து -களி
கூர்ந்து