வாழ்க்கை...
வகை வகையாய்
சொன்னார்கள்
வாழ்க்கையை
விவரித்து...
வாழ்க்கை
உணர்வுகளை
அஸ்திவாரமாய் கொண்டு
பரிவு
பாசம்
பொறுமையால்
கட்டப்பட்ட
மகிழ்ச்சி மாளிகை.....
அதை
உணர்ச்சிகளை
உபகரணமாய் கொண்டு
பகை
போட்டி
பொறாமையால்
உடைத்து
கள்வர் குகை
ஆக்காதீர்....