எங்க ஊரு !

சுட்டெரிக்கும்
சூரியனின்
சொந்த ஊரு
எங்க ஊரு !

பொட்ட காட்டு
பூழுதிக்கெல்லாம்
புடிச்ச ஊரு
எங்க ஊரு !

நெட்ட நெட்ட
பனைமரங்கள்
பரவிருக்கும்
ஊரு !

அது

வெட்ட வெட்ட
வளர்ந்து வரும்
கருவ முள்ளு
காடு !

எழுதியவர் : பா.கபிலன் (20-Jun-11, 3:54 pm)
பார்வை : 386

மேலே