தான் தனை தொலைத்திடு...
தான் தனை தொலைத்திடு...
அறிந்ததை புரிந்திருந்தும்,
புரிந்ததை அறிந்திருந்தும்,
அறியாததை தெரிந்திருந்தும்,
தெரியாததை அறிந்திருந்தும்,
சரிந்திடும் உறவினை சரி செய்திட,
அறிந்தும் அறியாமல் போவதேனோ?
புரிந்தும் தெரியாமல் இருப்பதேனோ?
தான் எனும் அகந்தையை அகற்றினால்,
கை அகல இதயம் கைகூடி அகம் அழகாகி,
வசந்தத்தின் வாயில் வசப்படுமே வளம்பெருவோமே...