காதலி இயற்கையோடு

கருமேகம் சூழ கண்டேன்
உன் கேசத்தில்!!
மின்னலடிக்க கண்டேன்
உன் முத்து பல் வரிசையில்!!
மெல்ல தூறலிட கண்டேன்
நீ வாய் திறந்து பேசுகையில்!!
பெளர்ணமி நிலவை கண்டேன்
உன் அழகிய வட்ட முகத்தில்!!
விடிவெள்ளியை கண்டேன்
உன் சிங்கார கண்களில்!!
புதிதாக ரோஜா மலர கண்டேன்
உன் தேன் சொரியும் செவ்விதழில்!!